For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உயிரினங்களை பாதுகாக்க அதிரடி திட்டம்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக கேரளா எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி,கேரளவனப் பகுதியும் இணைந்து பல ஆயிரம் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும் இப்பகுதிகயில் ஏராளமான அருவிகளும், அரியவகை மூலிகை செடிகளும், விலங்கினங்களும், ஊர்வன வகைகளும் அதிகளவில் வாழ்கின்றன.

forest Officials review at In mountain areas of the Western Ghats

இந்த நிலையில் இந்த இருமானில எல்லைகளில் உள்ள வனங்களில் வசிக்கும் உயிரினங்கள் இருமானில வனப் பகுதிகளிலும் சுற்றி திரியும் வண்ணம் திட்டங்களை உலக வங்கியின் உதவியோடு நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கூறுவதை மெய்பிக்கும் வண்ணம் நேற்று இருமானில எல்லையோர மாவட்ட வன அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தி்த்த நெல்லை மாவட்ட வனத்துறை தலைவரும், களக்காடு புலிகள் காப்பாகத்தின் இயக்குனருமான வெங்கேடஷ் கூறுகையில், வனப்பகுதியிலும், நிலப்பரப்பிலும் நிலங்களும் மிக முக்கியமான நிலப்பரப்பு ஆகும், அகஸ்தியர் மலை நிலப்பரப்பிலும் பெரியார் மலை நிலப்பரப்பிலும் வண உயிரினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன.

இந்த இரு மாநில எல்லை களில் வசிக்கும் வன உயிரினங்கள் இடம் பெயர்வதற்கான வழிகள் மற்றும் வணவிலங்குகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு மற்றும் இந்த பகுதியில் உலக வங்கி உயிர் பண்மை திட்டத்தினை நடைமுறைபடுத்துவதன் சாத்திய கூறுகள் குறித்து எல்லையோர தமிழக கேரள வனத்துறையினர் ஆய்வு நடத்தினோம்.

இந்த ஆய்வு கள் மூலம் தென்மலை,செந்தூரணி,ஆகிய வனப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் அதிகாரிகள் தரப்பில் வன உயிரினங்களை பாதுகாத்திடவும்,கருத்துக்களை பரிமாற்றம் செய்வது பாதுகாப்பது,எல்லைகளை பாதுகாப்பது, உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வனங்கள் வளமாக இருப்பதற்கும் வன உயிரினங்கள் இருப்பது மிகவும் நல்லது. உயிரினங்களால் வனம் வளமடையும்,நீர் நிலைகள் மேம்படும்.

தமிழ்நாடு, கேரளா வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, மிளா போன்ற வன உயிரினங்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் இந்த வன உயிரினங்கள் வனப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்திடவும்,வனப்பகுதிகளில் நடமாடும் வண்ணம் வாகனங்களில் சிக்கி உயிரிழக்காத வண்ணம் பூமிக்கடியிலும் பூமிக்கு மேல் பகுதிகளிலும் பாதைகளை அமைக்கும் வண்ணம் முயற்சிகளை மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான முதல்கட்ட முயற்சி தான் இந்த ஆய்வு என்றார்.

English summary
Nellai forest Officials review at In mountain areas of the Western Ghats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X