சேலம் ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்கவில்லை.. புதிதாக 4 தனிப்படைகள் அமைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பார்சல் பெட்டிகளின் மேல்புறமாக துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Four special forces have been set up in the case of a loot in Salem Rail

இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்புக் கொடுப்போருக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலா 20 பேர் வீதம் 4 தனிப்படைகளில் சிபிசிஐடி சேர்ந்த 80 பேர் இடம்பெற்றுள்ளனர். பணம் கொள்ளை அடிக்கப்பட்ட ரயில் பேட்டி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது.

ஓராண்டுகள் கடந்தும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Four special forces have been set up in the case of a loot of Rs 5.78 crore in Salem Rail. Each team will have around 20 members of CBCID.
Please Wait while comments are loading...