For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமையிலும் பிளஸ் டூவில் மாநில முதலிடம் பெற்ற மதுரை மாணவி 'கொலையாளி'யாக போலீசில் சரண்!!

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர், தனது அக்காள் வாழ்க்கையை நாசமாக்கிய அவரது மாமியாரை வெட்டிக் கொன்று போலீசில் சரணடைந்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார். இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற தங்கரத்தினம்.

கலையரசி, தங்கரத்தினத்தின் தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. இருப்பினு வறுமையை வென்று பிளஸ் டூ தேர்வில் தமிழ்- 188, ஆங்கிலம் - 97, வரலாறு - 122, புவியியல் - 149, பொருளியல் - 142 என 1200-க்கு 831 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் தங்கரத்தினம். தற்போது மதுரையில் தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்து வருகிறார்.

தனது அக்கா கலையரசிக்கும் அவரது கணவர் செல்வக்குமாருக்கும் இடையே வரதட்சிணை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மணமான ஒரே வாரத்தில், கலையரசி பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

இந்நிலையில், ஒரு ஆண்டு ஒடிவிட்டதால், செல்வக்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் கலையரசின் மாமியார் தங்கவேலு. இதனால் தங்கவேலு மீது ஆத்திரம் அடைந்த தங்கரத்தினம், நேற்று அவரது வீட்டுக்குச் சென்றார்.

அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அரிவாளால் கழுத்து, கால், கையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த தங்கவேலு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தங்கரத்தினம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

English summary
A 50-year-old woman was hacked to death by her niece over a family dispute in Madurai on Thursday. The police said Thangarethina (19) of Kamarajapuram who was top rank holder in last year Plus 2 exam upset over the last few days after her elder sister Kalaiarasi (35) quarrelled with her husband Selvakumar when she recently came to know about his first marriage. Angered over her sister’s life having been ruined by the in-laws, Thangarethina, went to Thangavelu's house and quarrelled with the deceased. Suddenly, she pulled out a machete and hacked her indiscriminately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X