For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.

இதையடுத்து 18 பேரையும் தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இது தொடர்பாக 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வழக்கில் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் என்று அனைவரும் வழி மீது விழி வைத்து காத்துக் கிடக்கின்றனர். ஆட்சி கவிழுமா, தப்புமா என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன.

பதில் சொல்லியாகிவிட்டது

பதில் சொல்லியாகிவிட்டது

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எஸ்வி சேகர் குறித்து வரும் 20-ஆம் தேதி வரை பொறுத்திருப்போம் என்று சபாநாயகர் பதில் கூறிவிட்டார். எனினும் வெளிநடப்பு செய்தால் என்ன செய்வது.

ஊழல் புகார்

ஊழல் புகார்

நெடுஞ்சாலை துறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் ரூ.4000 கோடி ஊழல் செய்துவிட்டதாக ஸ்டாலின் புகார் குறித்து கேட்கிறீர்கள். புகார் என்பது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் முகாந்திரம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

100 சதவீதம் உண்மை

100 சதவீதம் உண்மை

நெடுஞ்சாலை துறையில் டெண்டர் விடும் பணியில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பதை 100 சதவீதம் உறுதியாக கூறுகிறேன். புகார் குறித்து விசாரிக்க நீதிமன்றம், விசாரணை குழு என அரசியலமைப்பில் ஒரு குழு உள்ளது. புகார் குறித்து அவர்கள் பார்த்துக் கொள்வர்.

கருத்து

கருத்து

அரசாங்கத்தின் மீது களங்கம் ஏற்படுத்தவே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில்லாத பட்சத்தில் அதுகுறித்த கருத்து சொல்ல விரும்பவில்லை. ஸ்டாலின் கொடுத்த புகார் வீணாகிவிடும். 18 தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும். ஜாக்டோ ஜியோ சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற மனமிருந்தாலும் பணம் இல்லை என்ற சூழல்தான் உள்ளது. அட்சயபாத்திரம் இருந்தால் நாங்கள் அள்ளி அள்ளி ஊழியர்களுக்கு கொடுப்போம் என்றார் ஜெயக்குமார்.

English summary
Minister Jayakumar says that good things will be happened in disqualification case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X