பேராசிரியை நிர்மலா குறித்து விசாரிக்க வேண்டும்.. ஆளுநருக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புரோக்கராக மாறிய பேராசிரியை..வெளியான அதிர்ச்சி ஆடியோ

  மதுரை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா குறித்து விசாரிக்க வேண்டும் என மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முரளி வலியுறுத்தியுள்ளார்.

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை நிர்மலா தேவி.

  Governor should inquire the professor Nirmala: former principal

  இவர் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் மாணவிகளை அனுசரித்து செல்லுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மதுரைக்கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார்.

  மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே பேராசிரியை நிர்மலாவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Madurai college former principal Murali urged governor to inquire about the professor who invited the students for sexual work.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற