கடைசி மீனவர் மீட்கப்படும்வரை அரசு முயற்சிக்கும்.. சட்டசபையில் ஆளுநர் உரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஓகி பாதிப்பு குறித்து ஆளுநர் உரையாற்றி இருக்கிறார். தமிழக அரசு இதில் மிகவும் நன்றாக செயல்பட்டதாக அவர் பாராட்டி இருக்கிறார்.

இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைத்து பேசினார்.

Governor speaks about Ockhi in TN assembly

அவர் தனது உரையில் ''வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது'' என்று பாராட்டினார்.

ஓகி புயல் குறித்து பேசிய ஆளுநர் ''ஓகி புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.401 கோடியும் ரூ.4854 கோடியை நிவாரண நிதியாகவும் வழங்க கோருகிறேன்.'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் ''கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடரும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது'' என்றும் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First Session of the Tamil Nadu Legislative Assembly starts today. Governor Panwari Lal Purohit inaugurates the assembly. Governor speaks about Ockhi in TN assembly. He says TN and Central goverment are working together to find the missing fishermen.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற