ஜிஎஸ்டி வரியால் விலை உயராது… நிர்மலா சீதாராமன் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரியால் விலை உயராது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நிர்மலா சீதாராமன், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

GST, prices of products will not rise says Nirmala Sitaraman

ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது. பிராண்ட் பெயரில் விற்கப்படாத பொருட்கள் மீது வரி விதிப்பு கிடையாது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வணிகர்களுக்கு ஜிஎஸ்டி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க மாவட்ட தலைநகரங்களில் கருத்தரங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் முறையில் குறைபட்டுக் கொண்டு ஜிஎஸ்டியை குறை சொல்ல வேண்டாம். ஆட்களை வைத்து பதிவு செய்த வரி விகித முறை கணினி மூலம் பதிவேற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prices of products will not rise due to GST implementation said Union Minister Nirmala Sitaraman in Chennai.
Please Wait while comments are loading...