பேருந்து ஸ்டிரைக்... திமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை கண்டிக்கும் எச்.ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் என்ற பெயரில் மக்களை நடுத்தெருவில் இறக்கிவிட்ட திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் மக்கள் விரோத செயல் கண்டிக்கத்தக்கது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம். அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், மக்கள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் சென்று வர கடுமையாக சிரமப்பட்டனர்.

சிலரால் மட்டுமே மாற்று ஏற்பாடுகள் செய்ய முடிந்தாலும், பலருக்கு பேருந்து ஸ்டிரைக் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களின் போராட்டத்தை புரிந்து கொள்வார்கள் என்று தொழிற்சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

வரவேற்பு

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா அடுத்தடுத்து இரண்டு டுவீட்டுகளை போட்டுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத் தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

எச்.ராஜா மீது குற்றச்சாட்டு

மற்றொரு டுவீட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்காண மக்களை இரவில் நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் மக்கள் விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

க்யூவுல காக்க வெச்ச மாதிரியா?

எச்.ராஜாவின் இந்த டுவீட்டுக்கு பலரும் பதில் கருத்துகளை டுவீட்டி வருகின்றனர். நாம கோடிக்கணக்கான மக்களை ராவோடு ராவாக ஏ.டி.எம் க்யூவில் மாதக்கணக்கில் அலைக்கழித்ததை விட இது பரவாயில்லை சாரே என்று பதில் டுவீட்டியுள்ளார் இவர்.

அப்படியே இதையும் கண்டிங்க

அப்டியே பணமதிப்பிழப்பு என்னும் பெயரில் நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் நடு ரோட்டில் பலரையும் தவிக்க விட்டதையும் கண்டிச்சிருங்க. பலர் சாவதற்கு காரணமாக இருந்த உங்க எஜமானையும் வன்மையா கண்டிச்சிருங்க ப்ரோ என்று டுவீட்டியுள்ளார் இவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP National secretary H.Raja tweeted that people suffering due to transport strike is because of DMK and Communist transport employees unions only.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற