"வித்தவுட் கமெண்ட்".. எச். ராஜாவின் "சிறு" விளக்கம்!
Recommended Video

சென்னை: சிறுநீர்ப் பாசனம் என்று தான் பேசியது சரி என்பதை டிவீட் போட்டு விளக்கியுள்ளார் எச். ராஜா.
நுண் பாசனம் அதாவது சிறிய அளவிலான சொட்டு நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு (Micro Irrigation) மத்திய அரசு ரூ. 332 கோடி நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியிருப்பதாக நேற்று சென்னையில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.
அவர் பேசியதை தமிழில் மொழிபெயர்த்த எச். ராஜா, சிறு நீர்ப் பாசனத்துக்கு ரூ.332 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். ராஜா என்ன பேசினாலும் ஏன் இப்படி ஜெர்க் ஆகுது என்று டிவிட்டரில் ஓட்டிக் கொண்டுள்ளனர்.
Without comment pic.twitter.com/YMwEGs0lAC
— H Raja (@HRajaBJP) July 10, 2018
இந்த நிலையில் தான் பேசியது சரியே என்பதை விளக்கும் வகையில் ஒரு டிவீட் போட்டுள்ளார் எச். ராஜா. அதில் வித்தவுட் கமெண்ட் என்று போட்டு மைக்ரோ என்பதற்கான அர்த்தம் என்று கூறி ஒரு ஸ்கிரீன்ஷாட்டைப் போட்டுள்ளார். அதில் சிறிய, நுண்ணிய, நுண் என்று பொருள் போடப்பட்டுள்ளது.
நாமும் Micro அல்லது Minor ஆகியவற்றுக்குப் பொருள் தேடிப் பார்த்தோம். எங்குமே சிறுநீர் என்று வரவில்லை. மாறாக நுண், சிறிய என்றுதான் வருகிறது. எந்த இடத்திலும் சிறுநீர் என்று இல்லை.

ஆக, சிறிய என்று ராஜா கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மாறாக சிறுநீர் என்று கூறியதுதான் தப்பாகப் போய் விட்டது. அட வாய் தவறி வந்துருச்சுப்பா என்று ராஜா டிவீட் போடுவார் என்று பார்த்தால் நான் பேசியதுதான் சரி என்பது போல அவர் போட்டுள்ள டிவீட்டிலும் மக்கள் புகுந்து விளையாடிக் கொண்டுள்ளனர்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications