For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேடுதல் வேட்டையில் தனிப்படை.. முன்ஜாமின் தாக்கல் செய்ய எச்.ராஜா முடிவு.. இன்று வெளியே வருகிறார்?

இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்ஜாமின் தாக்கல் செய்ய எச்.ராஜா முடிவு..வீடியோ

    சென்னை: இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கொண்டு வரும். ஆனால், அது தமிழகத்தில் மட்டும்தான் பாஜகவிற்கே பிரச்சனையை கொண்டு வரும்.

    பாஜக ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இணையத்தில் ''நெகட்டிவ் டிரெண்ட்'' ஆகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார்.

    இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    எச்.ராஜா மீது 8 வழக்கு

    எச்.ராஜா மீது 8 வழக்கு

    இந்த நிலையில் காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை மிகவும் கொச்சையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 188, 290, 294 பி, 353, 153 ஏ,. 505 (1), 506 (1) ஆகிய 8 பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

    சந்திப்பார்கள்

    சந்திப்பார்கள்

    மேலும் எச். ராஜா மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளனர். எச்.ராஜாவிற்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது என்றும் முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்று இவர்கள் தலைமை நீதிபதியிடம் முறையிடுவதால், எச்.ராஜா விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    தனிப்படை அமைப்பு

    தனிப்படை அமைப்பு

    அதே சமயம் எச்.ராஜாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் போலீஸ் கொண்ட இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எச்.ராஜா நேற்றே தலைமறைவாகிவிட்டார். நேற்று மன்னார்குடி சென்ற அவர் அதன்பின் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

    முன்ஜாமின் தாக்கல் செய்ய வாய்ப்பு

    முன்ஜாமின் தாக்கல் செய்ய வாய்ப்பு

    இந்த நிலையில் இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் யாராவது எச்.ராஜாவிற்கு ஆதரவாக ஆஜராகவும் வாய்ப்புள்ளது.

    English summary
    H Raja plans to get anticipatory bail to escape from the arrest for his speech against Court and Police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X