For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவேண்டும்.... எச். ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

H.Raja says E.V.K.S. Elangovan should resign

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து மத்திய அரசு இனிப்பான செய்தியை தந்திருக்கிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வேண்டுமென்றே ஜல்லிக்கட்டை குழிதோண்டி புதைக்கும் விதமாக காளைகளை காட்சிப்படுத்துதல் பட்டியலில் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைபெறப்பட்டது.

ஆனால் மோடி அரசோ மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று பெரும்முயற்சி மேற்கொண்டது. கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக தலைவரான அமித்ஷா சென்னைக்கு வந்திருந்தபோது,சிவகங்கைமாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் 600 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கையெழுத்திட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று அதன் ஆதரவாளர்களுடன் அமித்ஷா விடம் மனுகொடுக்கப்பட்டது.

இருப்பினும் சில சிக்கல்கள் தொடர்ந்ததால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு பாரம்பரியமான அடையாளங்கள் குறித்துகேட்டார். அதற்கு தமிழ் இலக்கியங்களில் இருந்து ஆதாரத்தோடு விளக்கம் தரப்பட்டது. அதையடுத்து பாஜக அரசு ஜல்லிக்கட்டுக்கு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது..

இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிய ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்வாரா? என்று கேட்டார். தற்போது நான் கேட்டுக்கொள்வதெல்லாம் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதிதரப்பட்டுவிட்டது என்பதால் இளங்கோவன் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதே. அதுதான் கெளரவமானதும், நியாயமானதுமாக இருக்கும்.

எனவே ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை பிறப்பித்த பிரதமர் மோடி, சுற்றுச் சூழல் அமைச்சர் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவிததுக்கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு இது தற்காலிக அனுமதி என்று கருதவேண்டிய அவசியமில்லை. அரசாணையில் முழுமையான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமான அனுமதிதான் என்றார்.

BJP leader H.Raja said E.V.K.S. Elangovan should resign from his post

60 words

மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
BJP leader H.Raja said E.V.K.S. Elangovan should resign from his post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X