ஆரம்பமே அசத்தல்.. முதன்முறையாக "நரிக்குறவர்" இன மாணவியருக்கு ஜாதி சான்றிதழ்.. பெரம்பலூர் பெருமிதம்
பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதன்முறையாக, நரிக்குறவர் இன மாணவியருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.. இதனால் பெரம்பலூர் மாவட்டமே பூரித்து கிடக்கிறது!!
மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது.
முன்னதாக, நரிக்குறவன், குருவிக்காரன் எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்ட நிலையில், குருவிக்காரர் - நரிக்குறவர் என மாற்றப்பட வேண்டும் என்பதற்காக அரசாணையை வெளியிடாமல் இருந்தது தமிழ்நாடு அரசு.

அரசாணை: அதற்கு பிறகு, மாணவர் சேர்க்கை தொடங்க இருந்ததால், அச்சமூகத்தினரை பாதிக்காது என்பதற்காக அப்போதே அரசாணையை வெளியிட்டு, பிறகு திருத்தப்படும் என்றும் கூறியிருந்தது தமிழ்நாடு அரசு.. அதாவது, இந்த கல்வி ஆண்டிலேயே இப்பிரிவுகளை சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு வெளியிட்டவாறே தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருந்தது..
ஆன்லைன் விண்ணப்பம்: இதையடுத்து மாநிலம் முழுவதும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்... அந்தவகையில், தமிழகத்திலேயே நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் முதல் முதலாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கு கிடைத்துள்ளது.
ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம், மலையப்ப நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகளும், பிளஸ்-2 முடித்து மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வு எழுத தயாராகி வரும் மாணவியான கோகிலா என்பவருக்கு நரிக்குறவன் என்ற பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.. மேலும் 15 பேருக்கு நேற்றைய தினம் சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது.

முதல்வருக்கு நன்றி: இது தொடர்பாக மாணவியின் தந்தையும், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு தலைவருமான காரை சுப்பிரமணியன் சொல்லும்போது, நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த மத்திய-மாநில அரசுகளுக்கும், அதற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மற்றும் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கும், அதற்காக போராடிய அரசியல் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் தமிழகத்தில் முதல் முதலாக நரிக்குறவன் என்ற பழங்குடியினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் பல்வேறு சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்..
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications