ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்.. நாளை ரிலீஸ்!
போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு வாரம் முன் வாரம் ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார். இந்த விளம்பரம் தமிழகம் முழுக்க சலசலப்பை ஏற்படுத்தியது.
யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா 3 வாரம் முன் பலியானார். ஆனால் இந்த பரபரப்பு அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.

கோவை போலீஸ் கைது
இதையடுத்து அவர் போலீஸ் மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கோவை போலீஸ் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கைது செய்தது. கோவை மண்டல சுகாதார துறை இணை இயக்குர் பானுமதி மற்றம் ஜான்சன் என இரண்டு பேர் ஹீலர் பாஸ்கர் மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கைது செய்யபட்டார்.

கடுமையான விசாரணை
ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.சி. 420 மற்றும் 511 ஆகிய பிரிவுகளில் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. கோவை ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் 15 நாள் காவலில் எடுக்கப்பட்டனர். இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

பதில்
இந்த நிலையில் தொடர் விசாரணையில், தன்னுடைய அனாடமிக் தெரபி ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் கடந்த 8 வருடங்களில் மட்டும் 1.5 கோடி ரூபாய் பணம் சம்பாதித்து இருக்கிறேன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பல நாடுகளுக்கு சென்று பயிற்சி அளித்தாக அவர் கூறியுள்ளார். மருத்துவம் சார்த்த ஆலோசனைகளை கடந்த 8 வருடமாக இந்தியா முழுக்க சென்று மக்களுக்கு வழங்கி வருகிறேன் என்றுள்ளார்.

ஜாமீன் வழங்கியது
இந்த நிலையில் ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஹீலர் பாஸ்கர் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.ஹீலர் பாஸ்கரின் மேலாளர் சீனிவாசனுக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications