For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை எதிரொலி: தமிழகம் முழுவதும் அணைகளில் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கி பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

கடந்த 4 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வரும் தொடர்மழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் அணைகள் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

Heavy rain effect: Dams water levels increase in Tamil Nadu

விடாது பெய்யும் மழை

வடகிழக்குப் பருவமழையினால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நீடிக்கும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.45 அடியாக நீடிக்கிறது. நீர் வரத்து 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

பெரியாறு அணை

பெரியாறு 125.5 அடியில் இருந்து 126.6 அடியாகவும், வைகை 43.18 அடியில் இருந்து 44.9 அடியாகவும் உயர்ந்திருக்கிறது.

பவானி சாகர் அணை

பவானி சாகர் அணை நீர் மட்டம் 70.18 அடியில் இருந்து 73.40 அடியாக அதிகரித்துள்ளது. அமராவதி அணை 67.15 அடியில் இருந்து 68.88 அடியாகவும் உயர்ந்துள்ளது.

மளமளவென உயர்வு

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கன மழை பெய்துவருகிறது. மழையினால் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரையிலான விபரப்படி பாபநாசத்தில் அதிகபட்சமாக 95 மி.மீ.,மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 473 கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் முந்தைய தினத்தைவிட 4.20 அடி உயர்ந்து 75.65 அடியாக இருந்தது.

குற்றாலத்தில் வெள்ளம்

சேர்வலாறு அணையில் 60 மி.மீ.,மழை பதிவானது. வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 95.80 அடியாக உயர்ந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 59.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 60 அடியாகவும் இருந்தது. குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து அதிகஅளவில் வெள்ளம் கொட்டுகிறது.

நிரம்பிய குண்டாறு

நெல்லை மாவட்டத்திலுள்ள பிற அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேக்கரை அடவி நைனார் கோவில் நீர்தேக்கம் வேகமாக நிரம்பிவருகிறது. குண்டாறு அணை நிரம்பியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

மூழ்கிய நெற்பயிர்கள்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தாயாராக இருக்கும் நெற் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்,பல இடங்களில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

உயரும் நீர்மட்டம்

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை 32.7 அடியில் இருந்து 35.75 அடியாகவும், பெருஞ்சாணி, 62.5 அடியில் இருந்து 65.50 அடியாகவும் உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி 48.7 அடியில் இருந்து 49.7 அடி, சாத்தனூர் 72.6 அடியில் இருந்து 72.55 அடி என நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது.

விரைவில் நிரம்பும்

பரம்பிகுளம், ஆழியாறு திருமூர்த்தி, சோலையாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என்றாலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பருவமழை தொடர்வதால் அனைத்து அணைகளும் இந்த மழை காலத்தில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரிகள் வருத்தம்

தொடர் மழையின் காரணமாக தீபாவளி பண்டிகை வியாபாரமும் கொண்டாட்டமும் பிசு பிசுத்து போய் உள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

English summary
North east monsoon begins on September 17 in Tamil Nadu. As result of continues rainfall in last week in Tamilnadu, the water levels in dams has been increased accordingly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X