விடாது விரட்டும் மழை.. மக்களே இந்த பாதுகாப்பு டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை நேரங்களில் தொற்று நோய் அபாயம் முதல் தலை வலி, காய்ச்சல் வரை பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

பருவ மழை இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கணித்துள்ள நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒரு பார்வை இதோ:

Here are some usfull tips to tackle monsoon
 • மழை நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும். அப்படியே செல்வதாக இருந்தால் டூவீலரில் செல்வோர் 30 கிமிக்கு மேல் வேகமாக ஓட்ட வேண்டாம்.
 • டூ வீலர்களை பார்க் செய்யும்போது, சைடு ஸ்டாண்டு போடாமல் சென்டர் ஸ்டாண்ட் போடுவது. இன்ஜினுக்குள் நீர் செல்வது தவிர்க்கப்படும்.
 • மரங்களின் கீழ் நிற்க கூடாது. இருசக்கர வாகனங்களையும் நிறுத்தவேண்டாம். மின் கம்பம், டிரான்ஸ்ஃபார்மர் அருகில் நிற்பதும் பாதுகாப்பானது அல்ல.
 • வெளியில் செல்பவர்கள் ஷூ, சாக்ஸ், லெதர் செருப்பு, ரப்பர் அல்லது பிளாஸ்டிக் செருப்புகளை அணியலாம். ஹீல்ஸ் செருப்புகளை தவிர்க்கவும்.
 • குழந்தைகளுக்கு கை, கால்களில் சாக்ஸ் அணிவித்துக் கொள்ளவும்.
 • வீட்டுக்குள் குழந்தைகள், முதியோர்களை காலணிகள் அணிந்து நடக்கச்சொல்லுங்கள்.
 • தண்ணீர் புகுந்துவிடாதவாரு, பிளாஸ்டிக் கவரில் டெபிட், கிரெடிட், ஆதார், ரேஷன் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
 • மொபைலில் முழுமையாக சார்ஜ் இருப்பதை போல பார்த்துக்கொள்ளவும். அரசு அறிவித்திக்கிருக்கும் உதவி எண்களை மொபைலில் வைத்துக்கொள்ளுங்கள். பயன்படுத்தாத நேரங்களில் செல்போன் டேட்டாவை ஆஃப் செய்து வைத்திருந்தால் டேட்டா மற்றும் மொபைல் சார்ஜ் வீணாகாது.
 • வீட்டில் குழந்தகளுக்குத் தேவையான பால், தயிர், பிரெட், பிஸ்கெட் போன்றவற்றை இருப்பில் வைத்திருங்கள். வெளியே செல்லும்போது பிளாஸ்டிக் கவர்களை உடன் எடுத்துச்செல்லலாம். மொபைல், பணம் போன்றவற்றை அதில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
 • உடல் சூட்டைத் தக்கவைக்க, மூலிகை டீ, சுக்கு மல்லிக்காபி, புதினா டீ, இஞ்சி டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். குடிநீரை எப்போது இளஞ்சூடாகவே அருந்தவேண்டும்.
 • மதியஉணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, சுண்டைவற்றல், சீரகம், புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம்.
 • உணவு உண்பதற்கு முன்னர் சோப் அல்லது ஹேண்ட் வாஷ் போட்டு கைகழுவுவது அவசியம். காதில் பஞ்சு வைத்துக்கொள்வது, மப்ளர் அணிந்து கொள்ளவது உடல் சூட்டை தக்க வைக்கும். செய்தி வெப்சைட்டுகளை தொடர்ந்து கவனித்து வருவது அவ்வப்போது உள்ள நிலவரத்தை அறிய உதவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here are some usfull tips to over come cold and other issues in the rainy time.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற