For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என சரித்திரம் சொல்லும்: சொல்வது கேப்டனே தான்

By Siva
Google Oneindia Tamil News

விருதுநகர்: விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என சரித்திரம் சொல்லும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக ட்விட்டரில் அவர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

விருதுநகரில் பேசிய அவர் கூறுகையில்,

விருதுநகர்

விருதுநகர்

நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். என் அம்மா கெப்பிலிங்கம்பட்டிக்காரர். அப்பா ராமானுஜபுரத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவிற்கு மாட்டு வண்டியில் வந்துள்ளேன்.

சிவகாசி

சிவகாசி

சிவகாசியில் தினமும் பட்டாசு விபத்து நடக்கிறது. விபத்தில் காயம் அடைபவர்களை நெல்லை அல்லது மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இங்கு ஒரு அமைச்சர் இருந்தும் தரமான மருத்துவமனை அமைக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல மருத்துவமனையை கட்டிக் கொடுப்போம்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

திமுக, அதிமுக ஆட்சியில் என்ன சுகத்தை கண்டீர்கள்?. விரோதிகளை மன்னித்துவிடலாம் ஆனால் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன். விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என சரித்திரம் சொல்லும்.

அரசியல்

அரசியல்

நாங்கள் அரசியலில் பிழைக்க வரவில்லை உழைக்க வந்திருக்கிறோம். ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை வீட்டிற்கு அனுப்புங்கள். இது தர்மவான்களுக்கும், அதர்மவான்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம்.

English summary
DMDK chief Vijayakanth said that history will tell that he lived for people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X