கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மதுரை மாவட்டத்துக்கு வரும் 30ஆம் தேதி லீவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி மதுரைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மீனாட்சி அம்மன் கோவிலையும் கள்ளழகர் கோவிலையும் இணைத்து சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

Holiday for Madurai On April 30th for Kallazhagar temple function

திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 30ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மே 12 பணி செய்யும் நாளாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Holiday for Madurai On April 30th for Kallazhagar temple function. The holiday will be compensated on May 12th.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற