For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்க்சிஸ்ட் செளந்தரராஜன் மாதிரி எம்.எல்.ஏக்கள் கிடைத்தால்தான் தமிழ்நாடு உருப்படும்!

Google Oneindia Tamil News

சென்னை: 2011 சட்டசபைத் தேர்தலில் வென்றது அதிமுகவாக இருக்கலாம். ஆனால் அதிகமாக செலவு செய்தது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள்தான் ஒரு புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது.

தேர்தல் சமயத்தில் பாலாறும், தேனாறும் ஓடுதோ இல்லையோ பண ஆறு பயங்கராமாகவே ஓடும். வாக்காளப் பெருமக்களை வளைத்துப் பிடிக்க ஒவ்வொரு கட்சியும் தன் சத்துக்கு ஏற்ற வகையில் பணத்தை அள்ளி விடுவதும், வீசி விளையாடுவதும் காலம் காலமாக நடந்து வருவதுதான்.

பண பலத்தைக் காட்டி வாக்காளர்களை கட்சிகள் வளைப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறது. இருந்தாலும் பண பலத்தின் ஆதிக்கத்தை இதுவரை முழுமையாக ஒழிக்க முடியவில்லை, தடுக்க இயலவில்லை.

2011 தேர்தலில் செலவுகள்

2011 தேர்தலில் செலவுகள்

இந்த நிலையில் 2011 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதை பார்த்தால் பல சுவாரஸ்யமான தகவல்களைக் காண முடியும்.

234 எம்.எல்.ஏக்களின் சராசரி செலவு

234 எம்.எல்.ஏக்களின் சராசரி செலவு

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று செலவுக் கணக்கை சமர்ப்பித்த 234 எம்.எல்.ஏக்களின் சராசரி செலவு ரூ. 7.12 லட்சமாகும். இதை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகபட்ச அளவு ரூ. 16 லட்சம்

அதிகபட்ச அளவு ரூ. 16 லட்சம்

இந்த ரூ. 7.12 லட்சம் என்ற தொகையானது, அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு அளவான ரூ. 16 லட்சத்தில் 45 சதவீதமாகும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 16 லட்சம் வரை செலவிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏக்களின் செலவு

அதிமுக எம்.எல்.ஏக்களின் செலவு

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 எம்.எல்.ஏக்களின் சராசரி செலவு ரூ. 6,96,316 ஆகும்.

தேமுதிக கணக்கு ரூ. 7.23

தேமுதிக கணக்கு ரூ. 7.23

தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களின் சராசரி செலவுக் கணக்கு ரூ. 7,23,068 ஆகும்.

திமுகவின் கணக்கு ரூ. 7.23

திமுகவின் கணக்கு ரூ. 7.23

திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 எம்.எல்.ஏக்களின் சாரசரி செலவு ரூ. 7,23,421.

சிபிஎம் கணக்கு

சிபிஎம் கணக்கு

10 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களின் சராசரி செலவு ரூ. 6,26,022 ஆகும்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் 5 பேரே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இவர்களின் சராசரி செலவுக் கணக்கானது ரூ. 9,15,187 ஆகும். இதுதான் அதிகபட் சராசரியாகும்.

14 லட்சத்துக்கு மேல் செலவிட்டவர்கள்

14 லட்சத்துக்கு மேல் செலவிட்டவர்கள்

தேர்தலில் போட்டியிட்டு வென்ற 234 பேரில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பண அளவில் 90 சதவீதத்திற்கும மேலாக அதாவது ரூ. 14 லட்சத்திற்கும் மேலாக செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

8 லட்சத்துக்கும் குறைவாக

8 லட்சத்துக்கும் குறைவாக

161 எம்.எல்.ஏக்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீதம் மட்டுமே அதாவது ரூ. 8 லட்சம் அளவுக்குத்தான் செலவிட்டதாக கணக்குக் காட்டியுள்ளனர்.

அதிகபட்ச செலவு அதிமுகவின் பச்சமால்

அதிகபட்ச செலவு அதிமுகவின் பச்சமால்

அதிகபட்ச அளவாக அதிமுகவின் கே.டி.பச்சமால் 15 லட்சத்து 73 ஆயிரத்து 700 ரூபாயை செலவு செய்துள்ளார். இவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.

2வது இடத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி

2வது இடத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி

2வது இடத்தில் இருப்பவர் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி. ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர் ரூ. 15,35,993 செலவிட்டுள்ளார்.

3வது இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்

3வது இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்

3வது இடத்தில் இருப்பவர் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன். இவர் செலவிட்டதுரூ. 15,04,490 ஆகும்.

குறைந்த செலவு சிபிஎம் செளந்தரராஜன்

குறைந்த செலவு சிபிஎம் செளந்தரராஜன்

எம்.எல்.ஏக்களிலேயே மிகவும் குறைவாக செலவிட்டு வென்றவர் பெரம்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. செளந்தரராஜன்தான். இவர் வெறும் 75 ஆயிரத்து 595 மட்டுமே செலவிட்டுள்ளார்

2வது இடத்தில் பண்ருட்டியார்

2வது இடத்தில் பண்ருட்டியார்

2வது இடத்தில் இருப்பவர் ஆலந்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் வென்றவரான பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் செலவிட்டது ரூ. 2 லட்சமாகும். 3வது இடத்தில் துறையூர் அதிமுக இந்திரா காந்தி. ரூ. 2.5 லட்சம் செலவிட்டுள்ளார்.

25 சதவீதம் பேரிடம் பொதுக் கூட்ட கணக்கு இல்லை

25 சதவீதம் பேரிடம் பொதுக் கூட்ட கணக்கு இல்லை

234 பேரில் 58 பேர் அதாவது 25 சதவீதம் பேர் பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பான செலவுக் கணக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் தாங்கள் கூட்டங்களுக்காக செலவிடவில்லை ன்று கூறியுள்ளனர். 77 பேர், பொதுக் கூட்டங்களுக்காக ரூ. 10,000க்கும் குறைவாக செலவிட்டதாக கூறியுள்ளனர்.

டிவி, நாளிதழ்களுக்காக செலவிடாத 58 பேர்

டிவி, நாளிதழ்களுக்காக செலவிடாத 58 பேர்

58 எம்.எல்.ஏக்கள், டிவி, நாளிதழ்கள் போன்றவற்றில் விளம்பரம் கொடுக்க எந்தப் பணத்தையும் செலவிடவில்லை என்று கணக்கில் கூறியுள்ளனர்.

தொண்டர்களுக்காக செலவிடாத 56 பேர்

தொண்டர்களுக்காக செலவிடாத 56 பேர்

56 எம்.எல்.ஏக்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்காக தாங்கள் எதுவும் பணம் தரவில்லை என்று கூறியுள்ளனர். 77 பேர் இதற்காக ரூ. 10,000க்கும் குறைவாக செலவிட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.

வாகனமே இல்லை

வாகனமே இல்லை

5 பேர் வாகனங்களுக்காக தாங்கள் எதுவும் செலவிடவில்லை என்று கூறியுள்ளனர். 43 பேர் இதற்காக ரூ. 1லட்சத்திற்கும் குறைவாக செலவிட்டதாக கூறியுள்ளனர்.

ஆர்ச் கூட அமைக்காத 7 பேர்

ஆர்ச் கூட அமைக்காத 7 பேர்

7 பேர் அலங்கார ஆர்ச், போஸ்டர், பேனர் உள்ளிட்டவற்றுக்காக எந்த செலவும் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். 20 பேர் இதற்காக ரூ. 10,000க்கும் குறைவாக செலவிட்டுள்ளனராம்.

இதுல பல செலவுக் கணக்கு நம்புவது போலவே இல்லையே!

English summary
Money flows in all quarters during an election. With the assembly elections to various states coming up, it would be interesting to take a look at the spending pattern. This report would focus on how the MLAs in Tamil Nadu had spent during the 2011 elections which was won by the AIDMK. This year around it would be a hard fought battle and there could be a slight increasing in the spending by the MLAs and other candidates who are all geared up to face the polls. The average spending in the year 2011 by the MLAs in Tamil Nadu was Rs 7.12 lakh according to a detailed report by the Association for Democratic Reforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X