For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டத்திற்கு வந்தது 10 பேர் தானே.. கார்த்தி சிதம்பரத்துக்கு இத்தனை வாக்குகள் கிடைத்தது எப்படி?

By Siva
Google Oneindia Tamil News

How does Karthi Chidambaram get this many votes?
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு 63 ஆயிரத்து 573 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக தொகுதியில் சிதம்பரம் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

ஆனால் சிதம்பரத்தின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வெறும் 10 பேர் வந்தனர். அப்படி ஆட்கள் வராத நிலையிலும் மனம் தளராமல் பிரச்சாரம் செய்தார் சிதம்பரம். நான் வெற்றி பெற்றால் சிவகங்கை தொகுதியில் பல முன்னேற்ற வேலைகளை செய்வேன் என்று கார்த்தி வாக்குறுதி அளித்தார்.

தந்தையும், மகனும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிவகங்கையில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்கு 63 ஆயிரத்து 573 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அதிமுகவை தொடர்ந்து திமுக, பாஜக வேட்பாளர்கள் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளனர்.

English summary
While handful of people attended P. Chidambaram's rally, his son Karthi has got 63,573.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X