Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவியுடன் காதல்.. காதல் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்.. ஆடிய நாடகத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட காதலால் மனைவியை கொன்று நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிட்டு தஞ்சாவூரில் தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்திய கணவனை கைது செய்த போலீசார், காதலி மற்றும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32) இவர் எலவம்பட்டி பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் திவ்யா (24) என்ற பெண் ஓட்டுனர் பயிற்சி கற்றுக்கொள்ள வந்தார்.

காதல்

காதல்

சத்தியமூர்த்தியும் ஓட்டுனர் பயிற்சி அளிக்கும்போது ஆசை வார்த்தைகளை கூறி காதல் வலை விரித்துள்ளார். இந்த வலையில் திவ்யாவை விழ வைத்துள்ளார். இந்த நிலையில் திவ்யா பிஎட் பட்டதாரி படிப்பு படித்து இருக்கும்போது சத்தியமூர்த்தியும் திவ்யாவை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலை கோயிலில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

பழக்கம்

பழக்கம்

குழந்தையை பராமரிக்க முடியாத காரணத்தினால் திவ்யா தனது சொந்த வீடான கொட்டாவூர் கிராமத்திற்கு வந்து தனது பாட்டி தாத்தாவிடம் குழந்தையை வளர்த்து வந்தார். சத்தியமூர்த்தி தனது மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியை நலம் விசாரித்து இருந்து வந்தார். இந்த நிலையில் திவ்யாவின் உறவுக்கார பெண்ணான திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சத்தியமூர்த்தி விருப்பம்

சத்தியமூர்த்தி விருப்பம்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். லட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு சத்தியமூர்த்தி இருந்துள்ளார்.

நாடகம் அரகேற்றம்

நாடகம் அரகேற்றம்

இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனது மனைவியிடம் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது நாம் மூன்று பேரும் இறந்து விடலாம் என்று தெரிவித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அப்போது திவ்யா நமக்கு பெண் குழந்தை உள்ளது அந்தப் பெண் குழந்தையை யார் காப்பாற்றுவது என்று கேட்டு தற்கொலைக்கு மறுத்துள்ளார்.

தற்கொலை செய்வோம்

தற்கொலை செய்வோம்

அப்போதே திவ்யாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது நீ தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் உன்னை நான் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட சத்தியமூர்த்தி செப்டம்பர் மாதம்25ஆம் தேதி கொட்டாவூரில் இருந்த திவ்யாவின் வீட்டிற்குச் சென்று சனிக்கிழமை சாமி கும்பிட கோயிலுக்கு சென்று வரலாம் என கூறி தனது குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.

கொலை செய்தார்

கொலை செய்தார்

இருசக்கர வாகனத்தில் வந்த சத்தியமூர்த்தி எலவம்பட்டி அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு உள்ள அவரது ஓட்டுநர் பயிற்சி அலுவலகத்திற்கு வந்து திவ்யாவிற்கு இரண்டு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளார். அதில் மயங்கிய திவ்யாவை உடனடியாக கைத்தாங்கலாக அருகே உள்ள நிலத்திற்கு அழைத்துச் சென்று வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி அங்கிருந்து குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் திவ்யா உயிரிழந்தார்.

தப்பிய சத்திய மூர்த்தி

தப்பிய சத்திய மூர்த்தி

இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தியை கந்திலி போலீசார் எஸ்பி தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் எடுத்துச் சென்ற கார் வாலாஜா சோதனை சாவடியில் பதிவாகி இருந்தது. எனவே வேலூர் மாவட்டம் மற்றும் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சத்தியமூர்த்தியையும் குழந்தையையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சத்தியமூர்த்தி ஒரு வீடியோ பதிவை போலீசுக்கு வெளியிட்டிருந்தார்.

தனிப்படை அமைப்பு

தனிப்படை அமைப்பு

அதில் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது ஆகையால் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டு நானும் என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என நாடகமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனை அறிந்த போலீசார் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு பகுதிகளில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

இந்த நிலையில் கடந்த 28 தேதி சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே காரை நிறுத்திவிட்டு குழந்தையுடன் தப்பியோடியுள்ளார். அதன்பின் விசாரணையில் அங்கு செவிலியர் படிப்பு படித்துக்கொண்டிருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த சந்திரனின் மகள் லட்சுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இருவரும் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி பதிவு போலீசாருக்கு சிக்கியுள்ளது. அதன் பின் தான் இந்த கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது.

விசாரணை

விசாரணை

லட்சுமியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை சந்திரன் போரூர் காவல் நிலையத்தில் தன் மகளை சத்தியமூர்த்தி கடத்திச் சென்றுள்ளதாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னை பாரிஸ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரது சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் இருந்தது. நகை கடைகளில் நகை வாங்கியதும் குழந்தையுடன் அவர்கள் ஓட்டல்களில் இருந்து வந்ததும் தெரியவந்தது. அதன் பின் இருவரையும் கைது செய்ய சென்னை மாநகர போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் இவர்களை பிடிக்க சோதனைகள் மேற்கொண்டனர். ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி இருவரும் குழந்தையுடன் தப்பித்து சென்றுள்ளனர்.

சிக்கிய கொலையாளி

சிக்கிய கொலையாளி

காதலி மற்றும் கொலையாளி சத்தியமூர்த்தியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை குழுவினர் சென்னை, பெங்களூர், ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடினர், இந்த நிலையில் கொலையாளி சத்தியமூர்த்தி வைத்திருந்த பழைய செல்போனில் புதிய சிம்மை வாங்கி செல்போனை ஆன் செய்து உள்ளார். அப்போது அந்த டவர் லொகேஷன் போலீசாருக்கு வந்தது.

மாணவி ஒப்படைப்பு

மாணவி ஒப்படைப்பு

அதன் அடிப்படையில் நேற்று தஞ்சாவூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போல் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த சத்தியமூர்த்தியை கந்திலி போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.அதன் பின்னர் சத்தியமூர்த்தியை திருப்பத்தூருக்கு கொண்டுவரப்பட்டு திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் மாணவி லட்சுமி மற்றும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+