For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுவாசலுக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்புமே இல்லை... சத்தியம் அடிக்கும் ஓஎன்ஜிசி!

விளைநிலங்களில் எரிவாயு கிணறு அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்றும் ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் ராஜா விளக்கமளித்துள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை: விளைநிலத்தில் எரிவாயு கிணறு அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்றும் ஓஎன்ஜிசி செயல் இயக்குநரர் ராஜா விளக்கமளித்துள்ளார். விவசாயிகளிடம் சம்மதம் பெற்றே விளைநிலத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னையில் ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1955 ஆண்டு முதல் காவேரி படுகைகளில் நாங்கள் எண்ணெய் எடுப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதில் 1985 ஆண் ஆண்டு தான் முதல் வெற்றி கிடைத்தது.

தமிழகத்தில் மொத்தம் 720 எண்ணெய் கிணறுகள் உள்ளன , அதிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 840 டன் கச்சா எண்ணெய்யை கிணறுகளில் இருந்து எடுத்து வருகிறோம்.

 ஆய்வுகள் நடைபெற்று வருகிறது

ஆய்வுகள் நடைபெற்று வருகிறது

நெய்வேலி முதல் ராமநாதபுரம் வரை ஆய்வு நடைபெறுகிறது. இதில் நெடுவாசலில் கச்சா எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, எண்ணெய் எங்கே கிடைக்கிறதோ அங்கேதான் எரிவாயு எடுக்க முடியும்.

 விவசாயிகளின் ஒப்புதலுடன்...

விவசாயிகளின் ஒப்புதலுடன்...

விவசாயிகளிடம் சம்மதம் பெற்றே குழாய்கள் பதிக்கப்பட்டன. இது போன்ற திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்காது .

 நிலத்தடி நீர் பாதிக்காது

நிலத்தடி நீர் பாதிக்காது

நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2000 மீட்டர் ஆழ்துளை கிணறுகள் போட்டு , இரும்பு குழாய்கள் போடப்பட்டு பாதுகாப்பான முறையில் தான் எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதனால் நிலத்தடி நீருக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. அதேபோல் 1955 ல் இருந்து இதுவரை தமிழகத்தில் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டதில்லை

 மக்கள் முன் விளக்கம் அளிக்க தயார்

மக்கள் முன் விளக்கம் அளிக்க தயார்

கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தான் விவசாயம் பாதித்துள்ளது தவிர, எண்ணெய் கிணறுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்ததாது . மக்கள் மத்தியில் நேரில் சென்று ஹைட்ரோ கார்பன் பற்றி விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்

 மீத்தேன் எடுக்கவில்லை

மீத்தேன் எடுக்கவில்லை

நெடுவாசலுக்கு கொடுத்தது வெறும் 10 சதுர கிலோ மீட்டர் மட்டும் தான். நெடுவாசலில் எடுக்க திட்டமிட்டது எண்ணெய். மட்டும் தான், மீத்தேன் திட்டம் அல்லது ஷேல் கேஸ் அங்கு இல்லை .

 மீத்தேன் எரிவாயு

மீத்தேன் எரிவாயு

ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில ஆற்றுப் படுகைகளிலும் இது போன்ற பல மாநிலங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுவாசல் திட்டத்திற்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை. ஜென் லெபாரட்ரிஸ் என்கிற தனியார் நிறுவனம் தான் அங்கு தொடங்க திட்டம் உள்ளது. அங்கு இன்னும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இவ்வாறு ஓஎன்ஜிசி செயல் இயக்குநரர் ராஜா கூறினார்.

English summary
Hydrocarbon project doesn't affect the farmlands or the groundwater level, #Neduvaasal people need not worry about it, said ONGC Chief Executive Raja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X