For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன்.. தொண்டர்கள் அமைதி காக்கவும்.. ஜெ. தீபா

சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்ததற்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவார் என்று அதிமுக மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதற்கு அதிமுகவின் இன்னொரு பிரிவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபாதான் அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

I will come, wait says J. Deepa

இந்நிலையில், தீபா கட்சிப் பொறுப்பேற்க வர வேண்டும் என்ற பேனர்கள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வைக்கப்பட்டன. 'சின்னம்மா வாழ்க' என்று சசிகலாவிற்கு கோஷமிட்டால் 'சின்னம்மா தீபா வாழ்க' என்று எதிர் கோஷங்களும் அதிமுக தொண்டர்கள் எழுப்பினர். இதற்கெல்லாம் மேலாக சேலத்தில் ஜெ.தீபா பேரவையும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்கால நலன் கருதி சரியான நேரத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தன்மீது அன்பு காட்டி பேனர்கள், கட் அவுட் வைப்பதும், தன் படத்தைப் போட்டு சுவரொட்டி ஒட்டுவது போன்ற செயல்களில் அதிமுக தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சி, அதிமுகவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீபாவை ஆதரித்தும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேனர் வைத்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
“I will come, wait and do not install flex banner for me” said Jayalalithaa’s niece J. Deepa to her supporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X