பிக்பாஸ் குறித்து இனிமே எதுவும் சொல்லப்போறதில்ல.. ஆர்த்தியின் தடாலடி முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இனி தான் எதுவும் கூறப்போவதில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தவர் நடிகை ஆர்த்தி. ஜூலியை ஃபேக் என கூறி வம்பிழுத்ததால் அவர் மீது வெறுப்படைந்த ரசிகர்கள் ஆர்த்திக்கு வாக்களிக்காமால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை காயத்ரிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் ஆர்த்தி. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் உண்மையை அறிந்த அவர் டிவிட்டரில் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆரவ் கேடி, ஜூலி போலி

ஆரவ் கேடி, ஜூலி போலி

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வந்த அவர், ஓவியா உண்மையானவர், ஆரவ் கேடி, ஜூலி போலி என்றும் கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஏற்கனவே பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்றவர் என்பதால் அவரது கருத்துக்கள் பெரிதும் பகிரப்பட்டது.

இனி எதுவும் கூறுவதில்லை

இனி எதுவும் கூறுவதில்லை

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்து தான் எதுவும் கூறப் போவதில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்துக்களை சில யூட்யூப் சேனல்கள் தனது கருத்தை தவறாக திட்டுவதைப் போல் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைதியாக பார்க்கப்போகிறேன்

அமைதியாக பார்க்கப்போகிறேன்

இதனால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக பார்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க அவரது ரசிகர்கள் மறுத்துள்ளனர்.

ரசிகர்கள் வேண்டுகோள்

ரசிகர்கள் வேண்டுகோள்

ஆர்த்தி தொடர்ந்து பிக்பாஸ் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்த்தியின் டிவிட்டால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Harathi said that she will not share her views about Biggboss on twitter. But her fans not accepting this.
Please Wait while comments are loading...