இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அங்கு நான் இருப்பேன் என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணிப்பும் எடப்பாடி அணியும் இணைந்தால் மகிழ்ச்சி என்றும் செந்தில் கூறினார்.

ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருபவர் நடிகர் செந்தில். தற்போது அதிமுகவில் குழப்பமும் பிளவும் ஏற்பட்டுள்ள நிலையில் செந்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நசெய்தியாளர்களிடம் பேசினார்.

I will support who gets the double leaf symbol: Actor Senthil

அப்போது தான் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையும் சார்ந்தவன் இல்லை என்று அவர் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி நான் என்று செந்தில் தெரிவித்தார்

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ? அங்கு நான் இருப்பேன் என்றும் செந்தில் கூறினார். இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு தன்னுடைய ஆதரவு இருக்கும் என்றார்.

மேலும் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கூட எந்த அணிக்கும் நான் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்ற அவர், ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Senthil says that He will support who gets the double leaf symbol. If the OPS team and the EPs team joines i will be happy Senthil said.
Please Wait while comments are loading...