ஒபிஎஸ்- சசிகலா கோஷ்டி சேர்ந்தா என்ன? சேராட்டி என்ன? - கொதிக்கும் மக்கள்-வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒபிஎஸ் கோஷ்டியும் சசிகலா கோஷ்டியும் சேர்ந்தா என்ன? சேராட்டி என்ன? என பொதுமக்கள் மக்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி என்றும் சசிகலா கோஷ்டி என்றும் இரண்டாகப் பிரிந்தது. தற்போது இரு கோஷ்டிகளும் ஒன்றாக இணையும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்காக அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

 If Admk two faction united what will happen

ஆனால் மக்கள் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து என்ன பேசுகிறார்கள் என ஒன் இந்தியா தமிழ் மக்களைச் சந்தித்து கேள்வி கேட்டது. அதற்கு மக்கள், இரண்டு பேரும் இணைந்து மக்களை ஏமாற்றத்தான் போகிறார்கள். இதில் இவர்கள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன என விரக்தியுடன் பதில் அளித்தனர்.

சிலர், 'ஓபிஎஸ் ஜெயலலிதா இறந்துவுடனேயே விசாரணை கமிஷன் அமைத்து அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால், இப்போது விசாரணை வேண்டும் என்று கூறுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை' என்றனர்.

சிலர்,'அதிமுகவின் இருகோஷ்டிகளும் இணைவதுதான் சிறந்தது. அப்போதுதான் அது ஒரு பெரிய கட்சியாக இயங்க முடியும். அதிமுக சின்னம் இரட்டை இலை அவர்களிடம் இருக்கும்' என்றனர்.

ஆக, பெரும்பான்மையான மக்களுக்கு இரு கோஷ்டிகளும் இணைவதிலோ பிரிந்து இருப்பதிலோ பெரிய ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது.

மேலும், ஓபிஎஸ் மீது இருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டதையும் மக்கள் கருத்து சுட்டிக் காட்டுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Admk's two faction Sasi team and Ops team if merge together, how will you feel, asked oneindia tamil to people. whether the united or not, what is the benefit for people they answered.
Please Wait while comments are loading...