செம்பரம்பாக்கம் ஏரியில் 2,500 கன அடிக்கு மேல் திறந்தால்.. தயாராக உள்ள 200 படகுகள்! கலெக்டர் பேட்டி
செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் 2,500 கன அடிக்கு மேல் திறந்தால் மீட்பு நடவடிக்கை எடுக்க 200 படகுகள் தயாராக வைத்துள்ளோம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை 2000 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்வரும் புயல் மழையை சமாளிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், மாவட்ட வெள்ளத்தடுப்பு பணி அதிகாரி சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட் பல்வேறு துறை அதிகாரிகள் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம், முடிச்சூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்கள்.

வெள்ளத்தடுப்பு
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், "செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தைவிட 20 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொண்டு தாழ்வான 100 பகுதிகளை தொடர்ந்து கண்கணித்து வருகிறோம்.

2,500 கன அடி
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் நீர்தேக்கம் அடையும் மண்ணிவாக்கம், முடிச்சூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 க.அடி விதம் வெளியேற்றப்படுவதால் பாதிப்பு இல்லை. அதுவே 2,500 கன அடிக்கு மேல் திறந்தால் மீட்பு நடவடிக்கை எடுக்க 200 படகுகள் தயாராக வைத்துள்ளோம். அதுபோல் ராட்சத மோட்டார்கள், ஜே.சி.பி.கிரேன் உள்ளிட்ட வாகனங்களை தயாராக வைத்துள்ளோம். அதுபோல் தாழ்வான பகுதிகளை மீட்பு பணிக்காக துணை கலெட்டர் பொருப்பில் உள்ள அதிகாரியும் ஈடுபடுத்தியுள்ளோம்.

110 ஏரிகள்
மேலும் 280 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இதுவரை முகாமில் யாரும் இல்லை. அதுபோல் மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. தேவைப்பட்டால் முன் அறிவிப்பு செய்த பின்னர் திறக்கப்படும். மாவட்டத்தில் பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

பாதுகாக்க நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 சதவிகித ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. அவைகளையும் கண்காணித்து வருகிறோம். புயல் மழை எதிர்நோக்கியுள்ளதால் விவசாயம் பயன்பாடு இல்லாத ஏரிகளில் 25 சதவீகிதம் ஏரிநிரை வெளியேற்றி வரும் நீரை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெள்ள அபாயம்
செம்பரம்பாக்கம் அணையின் முழுக்கொள்ளளவு 25.55 அடியாகும் அணையின் நீர் இருப்பு இன்று காலை 21.22 அடியாக இருந்தது . செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் நீர் திறப்பு வினாடிக்கு 1000 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது நீர் திறப்பு 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. . இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தமண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications