ஜெ. இருந்தபோது இப்படி சோதனை நடத்தியிருந்தால் இதவிட நிறையா கிடைச்சிருக்கும்.. திருநாவுக்கரசர் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இதுபோன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தால் இதைவிட அதிகமாக கிடைத்திருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்காமானவர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் வரி ஏய்ப்பு செய்ததற்காக முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்காக 1800 அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர். 180க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எந்த தவறும் இல்லை

எந்த தவறும் இல்லை

இந்நிலையில் இந்த ஆய்வுக்குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்த திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார்.

ஒரு அணி மீது மட்டும் ஏன்?

ஒரு அணி மீது மட்டும் ஏன்?

ஆனால் இந்த சோதனையை அதிக இடங்களில் ஆயிரக்கணக்கான அதிகாரிகளை கொண்டு நடத்தியிருப்பதும் அதிமுகவின் ஒரு அணி மீது மட்டும் நடத்தப்பட்டிருப்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன? என்பதை மக்களுக்கு வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சொத்துக்களை கொடுக்க வேண்டும்

சொத்துக்களை கொடுக்க வேண்டும்

அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருந்தால், அதனை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

அப்போது அதிகம் கிடைத்திருக்கும்

அப்போது அதிகம் கிடைத்திருக்கும்

ஜெயலலிதா மறைந்த போதே கட்சியினர் ஒன்றாக இருந்த சமயத்தில் வருமான வரி சோதனை நடத்தியிருந்தால் தற்போது கிடைத்திருப்பதை விட பல மடங்கு கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இதுபோன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தால் இதைவிட கூடுதலாக கிடைத்திருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி வைக்க திட்டம்

கூட்டணி வைக்க திட்டம்

அந்த சோதனை அதிமுகவின் ஒரு அணியை பலப்படுத்துவதற்காகவும், மற்றொரு அணியை பலவீனப்படுத்துவதற்காகவும் தான் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். பலப்படுத்தப்பட்ட அணிக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுத்து உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரசியல் நோக்கங்களுக்காக இதுபோன்ற சோதனைகளை நடத்தக்கூடாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவ்ர திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Congress leader Thirunavukarasar said that If this raid was conducted when Jayalalitha was alive it would have got some more.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற