சசிகலா ஜெயிலுக்கு போனா என்ன... நான் தான் இருக்கேன்ல... ஜெ. வேஷத்துக்கு ரெடியாகும் கிருஷ்ணபிரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவைப் போல வேஷம் போட்டுக் கொண்ட சசிகலாவின் இடத்துக்கு வருகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா.

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா. மகன் விவேக். இளைய மகள் சைலஜா. பவுண்டேசன் மற்றும் இளவரசி இயக்குநராக இருக்கும் நிறுவனங்களை கவனித்து வந்தார் கிருஷ்ணப்பிரியா.

சசிகலா குடும்பத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் அரசியலுக்கு காலடி எடுத்து வைக்க இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் கோதாவில் குதித்துவிட்டார். நீட்டுக்கு எதிரான அறப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் கிருஷ்ணப்பிரியா.

ஓவர்சீன்

ஓவர்சீன்

அரசியலில் யாரும் இறங்கலாம்... அது மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் காண சகிக்காமல் மற்றொருவரைப் போல உருவத்தை மாற்றி ஏமாற்ற துடிக்கும் சீன்களைத்தான் மக்களால் ஏற்க முடியாது.

சசிகலா

சசிகலா

ஜெயலலிதா மறைந்த உடனேயே தன்னை ஒரு ஜெயலலிதாவாக சசிகலா கற்பனை செய்து கொண்டார். உச்சகட்டமாக ஜெயலலிதாவைப் போல நடை, உடை பாவனை என அனைத்தையும் மாற்றினார். கடைசியில் அவருக்கு சிறைவாசம்தான் கிடைத்தது. மக்கள் எள்ளி நகையாடினர்.

தீபா

தீபா

அதேபோல் மார்டனாக வலம் வந்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திடீரென ஜெயலலிதாவைப் போல வேஷம் கட்டிக் கொண்டு வலம் வருகிறார். அவரையும் மக்கள் புறக்கணித்துவிட்டனர்.

கிருஷ்ணப்பிரியா

கிருஷ்ணப்பிரியா

இப்போது அடுத்து ஜெயலலிதா வேஷம் கட்டி நாடகத்தை அரங்கேற்ற வருகிறார் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக கிருஷ்ணப்பிரியா ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். சில டிவி சேனல்களிலும் இந்த வீடியோ ஒளிபரப்பாகிறது.

ஜெயலலிதாவைப் போல பொட்டு, சிகை அலங்காரம், ஜாக்கெட் என வேஷம் போட்டிருக்கிறார் கிருஷ்ணப்பிரியா. சமூக வலைதளங்களிலும், நீங்க பார்க்க ஜெயலலிதாவைப் போலவே இருக்கீங்க' என ஜால்ரா போடத் தொடங்கிவிட்டது காக்கைகள் கூட்டம்.

நாடு பார்த்ததுண்டா.. இதுபோல் நாடு பார்த்ததுண்டா!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ilavarasi's Daughter Krishnapriya who run the foundation also trying Jayalalithaa.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற