தவறான கருத்தடை ஆபரேஷனால் பெண் மரணம் ... உறவினர்கள் மறியல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியில் மருத்துவமனையில் தவறாக கருத்தடை ஆபரேஷன் செய்ததில் பெண் மரணமடைந்தார். பிறந்த குழந்தையுடன் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் சாவித்திரி. இவருக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. அதையடுத்து கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ள முடுவெடுத்து அங்கிருந்த மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொண்டார்.

In Krishnagiri, Veppanahalli woman died because of family planning operation

ஆனால், ஆபரேஷன் செய்த சில நிமிடங்களில் சாவித்திரி உயிரிழந்தார். மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த காரணத்தால் தான் சாவித்திரி இறந்துவிட்டார் எனக் கூறி மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாவித்திரி உறவினர்கள் கைக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன் இதே பகுதியில் அரசு மருத்துவமனையில் இருந்த 108 ஆம்புலன்ஸை ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாத காரணத்தால் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Krishnagiri, Veppanahalli woman died because of family planning operation and her relatives protested against hospital
Please Wait while comments are loading...