காவிரி விவகாரத்தில் திமுக விளம்பரத்திற்காக போராடுகிறது: ஆர்பி உதயகுமார்

Posted By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil
  திமுக விளம்பரத்திற்காக போராடுகிறது: ஆர்பி உதயகுமார்

  மதுரை: காவிரி விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விளம்பரத்திற்காக போராடுகின்றன என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நாளை காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

  in the cauvery issue dmk is protesting for familiarity rp udhayakumar

  இதனையடுத்து புதிய கட்டிடம் அமைய உள்ள இடத்தினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நமக்கல், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட முதல்வர் அறிவிப்பு செய்தார்.

  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர் பெருந்திட்ட வளாகம் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா முதல்வர், துணை முதல்வர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைய உள்ள கூடுதல் கட்டிடப் பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்.

  தமிழகத்தில் உள்ள பழுதான அரசு கட்டிடங்களில் அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு ஆண்மை உள்ள அரசாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

  எதிர்கட்சிகள் அரசியலுக்க்காக காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் குற்றம் சாட்டி வருகின்றார்கள். திமுக ஆட்சி காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை, மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன் உறுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமையும்.

  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஊடக கொடுக்கும் விளம்பரத்திற்காக போராடி வருகின்றனர், உண்மையில் உணர்வுடன் போராடவில்லை, அரசியலுக்காக செய்யப்படும் போராட்டத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்" இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பேசினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister RP Udhayakumar has said that In the Cauvery issue DMK is protesting for familiarity.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற