அன்று யுரேனியம் புதையல்... இன்று வைர புதையல்... நாளை என்ன கோவிந்தா??

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆந்திராவில் வைரமலை கண்டுபிடிப்பு- வீடியோ

  சென்னை: ஆந்திரா மற்றும் தெலுங்கானா வனப்பகுதிகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு யுரேனியம் கிடைத்தது. அதுபோல் இன்று வைர மலையே கிடைத்துள்ளது. இவற்றை கொண்டு ஆந்திரத்தின் வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம் என தெரிகிறது.

  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளி கோட்டையில் தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதையல் இருப்பதாக அரசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி புதையலை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  கோட்டையை சுற்றி இதுவரை 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கம் தோண்டப்பட்ட கோட்டைக்கு பின்புறம் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு செல்லும் பாதையில் 11 படிகளும், 3 தலைகள் கொண்ட நாகம், 11 தேவதைகளின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருப்பதை அறிந்து கிணற்றுக்கு கீழ் பகுதியில் சுரங்கம் இருக்கலாம் என முடிவு செய்தனர்.

  தர்கா வரை பெரிய மலை

  தர்கா வரை பெரிய மலை

  இதைத்தொடர்ந்து கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். இதில் கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த தர்கா அருகே மலைப்பகுதியில் வைர மலை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வைர மலை 12 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆந்திர அரசு மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

  யுரேனியம் புதையல்

  யுரேனியம் புதையல்

  கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் வனப்பகுதியில் உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் அணு தாதுப்பொருள் இயக்குநரகமும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். 45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அப்பகுதியில் பூமிக்கடியில் அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  தெலுங்கானா வரை நீள்கிறது

  தெலுங்கானா வரை நீள்கிறது

  இந்த வனப்பகுதியானது ஆந்திராவில் தொடங்கி தெலுங்கானா வரை நீள்கிறது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியமானது கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தை விட தரமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

  பூர்த்தி செய்யலாம்

  பூர்த்தி செய்யலாம்

  ஆந்திர மாநிலத்தில் சுமார் 5 லட்சம் டன் யுரேனியமும், தெலுங்கானாவில் ஒரு லட்சம் டன் யுரேனியமும் பூமிக்கடியில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யுரேனியம் படுகைகளால், இந்தியாவின் அணுத் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று கருதியிருந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஆந்திர மாநிலத்துக்கு ஜாக்பாட் அடித்தது போல் வைர மலையே புதையலாக கிடைத்தது. இதனால் இனி ஆந்திர மாநிலம் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

  வைரத்தை ஆய்வு...

  வைரத்தை ஆய்வு...

  மத்திய அரசின் வனத்துறை ஆலோசனை கமிட்டி அனந்தபூர் மாவட்டம் கல்யாண் துர்க் காடுகளில் வைரத்தை ஆய்வு செய்ய ஆந்திர மாநிலத்தின் தேசிய தாது உற்பத்தி கழகத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. அதன்படி 153 ஹெர்டேர் பகுதியில் 64 இடங்களை குடைந்து வைர மலையை ஆய்வு செய்ய அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In the year of 2015, Atomic Minerals Directorate (AMD) and Osmania University discovering significant quantity of uranium reserves in the Srisailam forests. Today they found Diamond mountain in sennoor fort. Andhra government are very happy on hearing this.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற