அரக்கோணம் அருகே விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை ஹெலிகாப்டர்!
Recommended Video

சென்னை: அரக்கோணம் அருகே இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் பகுதியில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான பயிற்சி தளம் உள்ளது. இன்று காலை சேத்தக் ரக ஹெலிகாப்டரில் விமானி பயிற்சிக்காக கிளம்பினார். பயிற்சியை முடித்து தரையிறக்க முற்பட்டபோது, திடீரென ஹெலிகாப்டர் பழுதாகி விழுந்து நொறுங்கியது.

இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்ளிட்டோர் அதிருஷ்டவசமாக தப்பினர். தொழில்நுட்ப ககோளாறு காரமமாக ஹெலிகாப்டர் பழுதடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டரில் பறந்து அதற்கென உள்ள வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது நடைமுறையில் உள்ள வழக்கம் தான். விபத்தில் ஹெலிகாப்டரின் முன்பகுதி, வால் பகுதி ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. ஹெலிகாப்டர் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த வகை ஹெலிகாப்டர்களில் அதிகபட்சமாக மூன்று பேர்தான் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications