எதற்கு சுழற்நாற்காலி...பட்டியலின ஊராட்சி தலைவருக்கு இழிவு...தர்ணாவில் பிரியா !!
மன்னம்பந்தல்: சுழற்நாற்காலி வாங்குவது குறித்து இழிவாக பேசி இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அவரது கணவர் மீது மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவரான பட்டியலினப் பெண் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரையடுத்து தலைமறைவான இவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவருக்கு பிரியா பெரியசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண். இவருக்கு வயது 23. தேர்தலுக்குப் பின்னர் திமுகவில் இணைந்தார். அலுவலகத்துக்கு தளவாடப் பொருட்கள் வாங்கும்போது, சுழற்நாற்காலியும் வாங்கியுள்ளார். இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்தாக பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவரும் விமர்சித்ததாக பிரியா தெரிவித்துள்ளார். இத்துடன் வளர்ச்சி திட்டங்களுக்கு துணைத்தலைவர் கையெழுத்திட மறுப்பதாகவும் கூறி பிரியா மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications