குரங்கணி தீ விபத்து: விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

  சென்னை: குரங்கணி காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

  குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.

  அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த விபத்தில் திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிந்ததால் தப்ப வழியின்றி 9 பேர் உடல் கருகினர்.

  100 சதவீத தீக்காயம்

  100 சதவீத தீக்காயம்

  10 பேர் எவ்வித காயங்களின்றி உயிர் தப்பினர். மீதமுள்ள 17 பேர் தேனி, மதுரை தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 100 சதவீத தீக்காயம் அடைந்த நிஷா, திவ்யா ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

  4 தனிப்படை அமைப்பு

  4 தனிப்படை அமைப்பு

  இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

  2 மாதங்களுக்குள் அறிக்கை

  2 மாதங்களுக்குள் அறிக்கை

  இந்நிலையில் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

  பரிந்துரைகள் செய்ய உத்தரவு

  பரிந்துரைகள் செய்ய உத்தரவு

  விசாரணை அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையில் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரிப்பார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் பரிந்துரைகளை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Atulya Misra appointed as investigating officer for Kurangani forest fire.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற