மோட்டார் வாகன பயனாளர்கள் கவனத்திற்கு..ஜூன் 16 முதல் பெட்ரோல்,டீசல் விலை தினசரி நிர்ணயமாம்!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இனி நாடு முழுவதும் ஜூன் 16 முதல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் இந்த முறையை மாற்றி தினசரி அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன்படி கடந்த மே 1ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கும் நடைமுறை புதுச்சேரி, விசாகபட்டினம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக இந்த திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 16 முதல் இந்த முறை செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாள் நள்ளிரவு புதிய விலை அறிவிக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி தங்கம், வெள்ளி விலை மட்டுமே சர்வதேச சந்தைகளை பொறுத்து தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications