For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனுக்கு செயற்கைக்கோள் ... 2020ம் ஆண்டில் அனுப்ப இஸ்ரோ புதிய திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: 2020 -ம் ஆண்டில் சூரியனுக்கு ஆதித்யா என்ற செயற்கை கோளை அனுப்ப இஸ்ரோ திட்டம் தீட்டியுள்ளது.

வரும் 2020-ம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் " வரும் 2017 முதல் 2020 ஆம் ஆண்டிற்குள்ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கை கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டாம் கட்டமாக சந்திராயன்-2 செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு அதனை நிலவில் தரையிறங்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

ISRO announces new satellite to sun…

தற்போதைய சூழ்நிலையில் ஜி.எஸ்.எல்.வியின் திறனை மேம்படுத்தும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2014 முதல் 2017 ஆம் ஆண்டிற்குள் நான்கு டன் அளவு அதி்கரிக்கப்பட உள்ளது.தொடர்ந்து 2020-ம் ஆண்டிற்குள் மேலும் ஆறு முதல் 10 டன் அளவு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிழய பேரிடர் தடுப்பிற்காக அனுப்பப்பட்ட கல்பனா, இன்சாட் 3-டி செயற்கை கோள் மிகவும் உதவிக்கரமாக செயல்பட்டு வருகிறது. அவை அனுப்பிய 400க்கும் மேற்பட்ட புகைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கூறினார்.

இந்திய பகுதிகள் குறித்து ஆராய்வதற்காகஅனுப்பப்பட உள்ள ஐ.ஆர். என்.எஸ்.எஸ் 1-பி வகை செயற்கை கோள்கள் அமெரிக்காவின் குளோபல் பொசிசன் முறைக்கு நிகரானதாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கை கோள் திட்டமிட்டபடி சரியானபாதையி்ல் செல்வதாகவும் , அதன் மொத்த பயண தூரமான 680 மில்லியன் கி.மீ தூரத்தில் தற்போது மூன்றில் ஒருபங்கு தூரத்தை கடந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

English summary
ISRO is planning to send “Adhithya” satellite to Sun in the year of 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X