For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னத்துரை வீட்டில் வருமான வரி சோதனை வதந்தியால் பரபரப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ராஜ்யசபா வேட்பாளர் மற்றும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சின்னத்துரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக அதிமுகவினர் கிளப்பிவிட்ட வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்துரையின் வீடு தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 2வது தெருவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் இன்று மதியம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதாக பத்திரிக்கையாளர்களுக்கு மர்பநபர்கள் மூலமாக தகவல் பரவியது.

IT raid in Chinnadurai house Rumors spread AIADMK party men

இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் சின்னத்துரையின் வீட்டிற்கு படையெடுத்தனர். ஆனால் அங்கு எப்படி எதுவும் நடக்கவில்லை. வீட்டின் வெளிப்பகுதியில் அமைதியாக நின்ற சின்னத்துரையிடம் வருமானவரித்துறையின் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இது அதிமுகவினர் வேண்டுமென்றே கிளப்பிவிட்ட வதந்தீ என்றார்.

அப்படியானால் சின்னத்துரை எந்த கட்சி?

சின்னத்துரையின் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது அமைச்சர் சண்முகநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியன் உள்ளிட்ட அனைத்து அதிமுக தரப்பினர் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சின்னத்துரை விதிமுறையையும் மீறி தனது அரசு வாகனத்தில் சைரன் விளக்கு பொருத்தி பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்மீது 2 கோடி ரூபாய் ஊழல் செய்தததாக எழுந்த புகாரே கட்சிப்பதவி பறிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

English summary
Income tax department raided the house of Cinnatturai would have been provoked by rumors of a rush.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X