காளீஸ்வரி நிறுவனத்தில் இரண்டாவது நாளும் தொடரும் வருமான வரி சோதனை ஏன் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காளீஸ்வரி எண்ணெய் நிறுவன அலுவலகங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 54 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று காளீஸ்வரி கோல்ட் வின்னர் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் 1993ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 IT raid continues in Kaleeswari oil refinery offices for second day

காலீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சென்னை மயிலாப்பூர், விருதுநகர் உள்பட 54 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் அதே இடங்களில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ரனர்.

காளீஸ்வரி நிறுவனம் பல ஆண்டுகளாக வருமான வரியை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் அங்கு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax department raid continues in Kaleeswari oil refinery offices for second day.IT raids in 54 places belong to that refinery company.
Please Wait while comments are loading...