நாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil
  தீபா கூட்டத்திற்கு வந்த பெண்கள் ஏமாற்றம்- வீடியோ

  நாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுக்கூட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்துவரப் பெண்கள் ஏமாற்றப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெ.தீபா கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

  J Deepa MGR Amma Deepa Peravai Meeting at Nagarkovil

  இதனால், நலத்திட்ட உதவிகள் வாங்குவதற்காக ஏராளமான பெண்களும், பொதுமக்களும் கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு இருந்தனர். கூட்டத்தில் ஜெ.தீபா உரையாற்றிவிட்டு, ஐந்து நபர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சென்றார்.

  இதனையடுத்து கட்சி நிர்வாகிகளும் கலைந்து சென்றனர். இதனால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்த பெண்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கூட்டம் முடிந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் நிர்வாகிகள் அவ்வாறு செய்யாமல் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  அதேபோல் பொதுக்கூட்ட மேடையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்த நாடகக் கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் உரியத்தொகை தராததால் ஊருக்கு செல்ல வழியின்றி தவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் ஜெ.தீபா கட்சியினரின் இந்த நடவடிக்கையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  J Deepa MGR Amma Deepa Peravai Meeting at Nagarkovil. People says that, Party Administrators are cheated us, without giving any Welfare Things.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற