For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசர சட்டம் மீதும், அரசியல்வாதிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை ஏன்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அவசர சட்டத்தை நம்பி, ஏமாறி, ஏமாறிய சோகத்தால்தான் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கேட்டு போராட்டத்தை தொடருகிறார்கள்.

அரசியல்வாதிகளை மக்கள் நம்பி ஏமாந்து போனதன் தொடர்ச்சியாகத்தான், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் எந்த ஒரு அரசியல்வாதிதையும் உள்ளேவிடவில்லை. வருடா வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, ஆளும் கட்சியினரும் கருத்து கூறி வந்த நிலையில், எதுவுமே நடக்கவில்லை. அரசியல்வாதிகள் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது.

Jallikattu: Why people of Tamilnadu wants permanent law

அதே அவநம்பிக்கை இப்போதும் தொடருகிறது. எனவேதான் அவசர சட்டத்தை அவர்கள் நம்பவில்லை. ஏனெனில், ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டும், விலங்கின பட்டியலில் இருந்து காளையை மத்திய அரசு நீக்க வேண்டும். மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அதேநேரம், அவசர சட்டம் உதவாது என்று கூறப்படுகிறது. 2008ல் திமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டை நடத்தினர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்குகள் காரணமாக ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை அவசர சட்டம் இயற்றுவதும் நடத்துவதுமாக இருந்த நிலையில், காளையை காட்சிப் பட்டியலில் சேர்த்ததால் அதற்கும் பங்கம் வந்தது. சுப்ரீம் கோர்ட் அவசர சட்டத்தை எளிதாக தடை செய்துவிட முடிந்தது.

இதையடுத்து, அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 3 வருடங்களாக, ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் போனது. எனவேதான் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டமே தீர்வு என்கிறார்கள் மக்கள். இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியை விட்டுவிட்டால் பிறகு தங்கள் கோரிக்கை நிறைவேறாது என மக்கள் அஞ்சுவதால், சூட்டோடு சூடாக நிரந்தர சட்டம் கேட்கிறார்கள் மக்கள்.

English summary
Why people of Tamilnadu wants permanent law for Jallikattu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X