For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோசய்யாவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு: அமைச்சரவை மாற்றம் என்று பரவிய வதந்தியால் பரபரப்பு

By Siva
Google Oneindia Tamil News

Jaya meets governor Rosaiah
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கவர்னர் ரோசய்யாவை நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வறிக்கையை அளித்ததாகக் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை 4.30 மணிக்கு ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். ரோசய்யா ஜெயலலிதாவுக்கு பொன்னாடை போர்த்தி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஜெயலலிதா மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வறிக்கையை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் கே.ரோசய்யாவை அவ்வப்போது சந்தித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைப்பது வழக்கம். அந்த அடிப்படையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து எடுத்துரைத்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கவர்னர் மாளிக்கைக்கு சென்றது அமைச்சரவை மாற்றம் குறித்து பேச என்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
CM Jayalalithaa has met governor Rosaiah last evening and reportedly handed him a report about the law and order situation in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X