For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.சசியின் பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்கள்.. சென்னை நகைக் கடைக்காரர்தான் காட்டிக் கொடுத்தாராமே?

ஜெ. சசி பதுக்கி வைத்த பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்களை சென்னை நகைக் கடை உரிமையாளர் ஒவுஅரே காட்டிக் கொடுத்தார் என கூறப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.சசியின் பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்கள்..வீடியோ

    சென்னை: சென்னையில் அண்மையில் சிக்கிய ஜூவல்லரி ஓனர் ஒருவர் காட்டிக் கொடுத்ததன் அடிப்படையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா பதுக்கி வைத்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதி0ப்பிலான வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளன.

    2011-ல் ஆட்சிக்கு ஜெயலலிதா மீண்டும் வந்ததைத் தொடர்ந்து அசையா சொத்துகள் வாங்கி குவிப்பதை அவருடன் இருந்த சசிகலா குடும்பம் நிறுத்திக் கொண்டது. வாங்கிக் குவித்த சொத்துகளை லாவகமாக பதுக்குவதிலேயே மிகவும் மும்முரமாக இருந்தார்கள்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஏராளமான ஆவணங்கள் பதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டுக்குப் பின் இதன் அடுத்த கட்டம் நடந்திருக்கிறது.

    வைரமாக்கும் ஆபரேஷன்

    வைரமாக்கும் ஆபரேஷன்

    அதாவது சேர்த்து வைக்கப்பட்ட ரொக்கப் பணம் அத்தனையுமே வைரமாக மாற்றும் மிகப் பெரிய ஆபரேஷன் நடந்திருக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றுதான் உதவியிருக்கிறது. இதை கண்காணித்து வந்தது வருமான வரித்துறை.

    அலறல் ஒப்புதல் வாக்குமூலம்

    அலறல் ஒப்புதல் வாக்குமூலம்

    நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடந்த போது இந்த நகை கடையும் சிக்கியிருந்தது. இதன் உரிமையாளர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்த வேண்டிய முறையில் நடத்தப்பட்ட விசாரணையில்தான் ஜெயலலிதா, சசிகலா எப்படியெல்லாம் வைரங்களாக மாற்றினர்; தாம் அதற்கு அப்படியெல்லாம் உதவினேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

    மெகா ரெய்டு

    மெகா ரெய்டு

    இந்த தகவல்களையெல்லாம் அடிப்படையாக வைத்துக் கொண்டும் 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையிலும்தான் தற்போது வருமான வரித்துறையினர் மெகா ஆபரேஷனில் மெனக்கெடுகிறார்களாம். போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களைத் தேடுகிற அதே நேரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்களும் வருமான வரித்துறையின் இலக்கு என கூறப்படுகிறது.

    அங்குலம் அங்குலமாக ஆய்வு

    அங்குலம் அங்குலமாக ஆய்வு

    இதனால்தான் பண்ணை வீடுகளை குறிவைத்து பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறை என கூறப்படுகிறது. தினகரன், திவாகரனின் பண்ணை வீடுகளை அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்வதும் இதற்குதானாம்.

    English summary
    According to the sources Sasikala and her family memebers had converted their money into the Diamonds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X