காங்கிரஸுக்கு சவுக்கடி கொடுங்கள்.. ஜெ. ஆவேசம்
கடலூர்: கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் சந்தித்தது இன்னல்களை மட்டுமே. சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடித்து, மக்கள் அவர்களுக்கு சவுக்கடி தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.
கடலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருண்மொழித்தேவனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மத்தியில் உள்ள சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். தன்னலக்காரர்களுக்கு மக்களவை தேர்தலில் சவுக்கடி கொடுக்கவேண்டும்.
40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். 40 தொகுதியிலும் வென்று தாய்நாட்டை காப்போம்.
அதிமுக வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக நலன் பாதுகாக்கப்படும். வேறு யாருக்கும் வாக்களிக்காதீர்கள். அப்படி வாக்களித்தால் உங்கள் வாக்குகள் வீணாகி விடும்.
திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என்றார் ஜெயலலிதா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications