தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமாரின் அடடே பதில்
தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே பதில் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே என மெச்சு கொள்ளும் அளவுக்கு ஒரு பதிலை கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் பாஜகவை வலுப்படுத்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் மேலும் பேசுகையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்ற பழக்கத்தை மாற்ற வேண்டும்.

ஆட்சி அமைக்கும்
குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். எப்படியும் 2019-இல் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். தமிழகம் மீது இத்தகைய குற்றச்சாட்டை அமித்ஷா கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாஜகவுக்கும் உள்ளது
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஒரு மாநிலத்துக்கு அகில இந்திய தலைவர் வருவதெல்லாம் அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும், கட்சியை பலப்படுத்துவது என்பதெல்லாம் எல்லா தலைவர்களுக்கும் இருப்பது போல் பாஜகவுக்கும் உள்ளது. அதன் அடிப்படையில் அமித்ஷா சென்னை வந்தார்.

சிறுநீர் பாசனம்
அவர் நேற்றைய தினம் இந்தியில்தான் பேசியுள்ளார். இந்தி யாருக்கும் புரியாது. அதை மொழிப்பெயர்ப்பு செய்தது யாரு, எச் ராஜா. மைக்ரோ இரிகேஷன் அதாவது நுண்ணீர் பாசனம் என்று அமித்ஷா கூறியதை சிறுநீர் பாசனம் என்று எச் ராஜா மொழிபெயர்த்துள்ளார்.

நம்பிக்கை
தமிழகம் ஊழல் மாநிலம் என்பதில் என்னை பொருத்தவரைக்கும் தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத்தான் கூறியிருப்பார். அதை எச் ராஜாதான் மாற்றி கூறியிருப்பார் என்பது எனது நம்பிக்கை. ஓட்டுக்கு நோட்டு என்ற நடைமுறையைதான் அமித்ஷா கூறியுள்ளார்.

இரு கட்சிகளுக்கு தெரியும்
இது அதிமுகவுக்கு தெரியாது. ஓட்டுக்கு நோட்டு கொடுக்கும் ஒரே கட்சி திமுகதான். திருமங்கலம் பார்முலா. 2-ஆவது நமது டோக்கன் செல்வர், இவரும் இந்த கலையில் கெட்டிகாரர். எனவே திமுக, தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளுக்கு அமித்ஷா கூறியிருக்கலாம்
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications