For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் ஜெயலலிதாவுக்கு சகல வசதிகள்: ஓ.பி.எஸ் பதவியேற்பை டிவியில் பார்த்தார்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் சிறைச்சாலையில் இருந்தபடி பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா இருப்பது விஐபிகளுக்கான சிறை என்பதால், அவரது கோரிக்கையை ஏற்று எல்சிடி டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகளை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

Jayalalitha Cell gets a makeover, has TV and fridge

அவரது அறையிலுள்ள கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலை போடப்பட்டு வெளியில் இருந்து யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியாதபடி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்காக, அவர் தங்கியுள்ள செல் முற்றிலும் நவீனமாக்கப்பட்டுள்ளது. வாஷ் பேசின், மேற்கத்திய ஸ்டைல் கழிவறை போன்றவை அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

பரப்பன அக்ரஹாராவில் மூத்த பெண் அதிகாரி இல்லாத காரணத்தால் மைசூர் மத்திய சிறையில் இருந்து பெண் அதிகாரியை 24 மணி நேர பாதுகாப்புக்காக பெங்களூர் அழைத்து வந்துள்ளது சிறை நிர்வாகம்.

ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் அதிகாரத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் ஜெயலலிதா இருக்கும் செல் பக்கம் போக வேண்டும் என்றால்கூட சிறையின் தலைமை கண்காணிப்பாளர் அல்லது சிறைத்துறை டிஐஜி அனுமதி அவசியம்.

ஜெயலலிதா குறித்த தகவல்களை அவ்வப்போது மீடியாக்களுக்கு கசியவிடாமல் இருப்பதற்காக, சிறைக்குள் பணியாற்றும் போலீசார் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை சிறையிலுள்ள தொலைக்காட்சி மூலமாக ஜெயலலிதா பார்த்ததாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
It was Tamil Nadu Chief Minister J Jayalalithaa who was sentenced to four years in jail on Saturday, but officials at the Parappana Agrahara Central Prisons seemed more nervous than the AIADMK chief herself. After all, they had the unenviable task of making sure that Amma, who enjoys VIP status, was provided with all facilities during her stay in the jail premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X