மறைந்த நடிகர் பசி நாராயணன் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்த ஜெ.,
சென்னை: 'பசி' நாராயணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு;
பிரபல திரைப்பட நடிகர் மறைந்த 'பசி' நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது மனைவி வள்ளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

எம்.ஜி.ஆர் நடித்த 'அன்பே வா, 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் 'பசி' நாராயணன் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக முதல்வர் ஜெயலலிதா அறிந்து கொண்டார்.
'பசி' நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 'பசி' நாராயணன் மனைவி வள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிடஉத்தரவிட்டார்.
மேலும், ரூ.10 லட்சம் வள்ளியின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125/- ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா 24.7.2016 அன்று அறிவித்தார்.
அதன்படி, 'பசி' நாராயணன் மனைவி வள்ளிக்கு ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார். நிதியுதவியை பெற்றுக் கொண்ட வள்ளி தனது நன்றியினை முதல்வருக்கு தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications