போயஸ் கார்டன் ஹார்டு டிஸ்க்கில் லம்ப்பாக சிக்கிய ஜெ. சசி பினாமிகள் பட்டியல்- பகீர் தகவல்
போயஸ் கார்டனில் நடைபெற்ற ஐடி அதிகாரிகள் சோதனையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறையிலிருந்து பினாமி பட்டியல் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை : போயஸ் கார்டனில் நேற்று முன் தினம் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பினாமிகள் பட்டியல் குறித்த தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை தலைகீழானது. அதேபோல் சசிகலாவின் வாழ்விலும் புயல் அடித்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக 5 நாள்கள் பரோலில் வந்த சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ரூ. 600 கோடி மதிப்பிலான சொத்துகளை பெயர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

சல்லடை போல் சலித்த அதிகாரிகள்
இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆகரவாளர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. அப்போது சுமார் ரூ.1000 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஐடி அதிகாரிகள் சோதனை
5 நாள்கள் நடைபெற்ற தொடர் சோதனையால் ஆடி போயிருந்த சசிகலா, விவேக், தினகரன் உள்ளிட்டோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தனர் வருமான வரித் துறை அதிகாரிகள். அதாவது போயஸ் கார்டனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலலிதா தங்கியிருந்த அறை தவிர்த்து சசிகலா தங்கியிருந்த அறை, பூங்குன்றன் தங்கியிருந்த அறை என விடாமல் தேடினர்.

கம்ப்யூட்டர்
பூங்குன்றன் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர்களும், சில ஹார்டு டிஸ்க்களும் கிடைக்கப் பெற்றன. அதில் ஜெயலலிதா- சசிகலாவின் பினாமிகளின் பெயர் பட்டியல் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை
ஜெயலலிதா- சசிகலாவின் பினாமிகள் வைத்துள்ள சொத்து பட்டியலை வைத்து அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். போயஸ் கார்டனுக்கு யாரும் வரமாட்டார்கள் எந்த தைரியத்தால் அங்கு பல உண்மைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவை ஒவ்வொன்றாக புற்றில் இருந்து ஈசல் கிளம்புவதை போல் கிளம்புகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications