For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு ஆதரவு என கருத்து.. மாஜி எம்.பி. மலைச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கம்: ஜெ. அதிரடி!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிமுக ஆதரிக்கலாம் என்கிற அடிப்படையில் கருத்து தெரிவித்ததற்காக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. மலைச்சாமியை கட்சியில் இருந்தே அதிரடியாக நீக்கியுள்ளார் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா.

லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் கடந்த 12-ந் தேதி இரவு வெளியாகின. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மத்தியில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

அத்துடன் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிமுக, பிஜூ ஜனதா தளம் கட்சிகளும் ஆதரிக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மலைச்சாமியின் பாஜக ஆதரவு கருத்து

மலைச்சாமியின் பாஜக ஆதரவு கருத்து

இந்த செய்திக்காக அதிமுக கருத்தை கேட்க முயற்சித்தன ஆங்கில தொலைக்காட்சிகள். அதிமுகவில் ஜெயலலிதாவைத் தவிர வேறுயாரும் அதிகாரப்பூர்வ கருத்தை தெரிவிக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் உணராத ஆங்கில தொலைக்காட்சிகள் அதிமுகவில் காணாமல் போயிருந்த முன்னாள் எம்.பி.யான மலைச்சாமியிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்டன ஆங்கில தொலைக்காட்சிகள். (வேற ஆளே கிடைக்கலை பாவம்) அவரும் நம்மை இவர்களாவது கண்டு கொண்டார்களே என நினைத்து பதில் அளித்தார்.

ஆனால் அவர் அளித்த ஒற்றை பதில்தான் நேற்றும் இன்றும் நாடு முழுவதும் வெளியான அதிமுக- பாஜக கூட்டணி செய்திகளுக்கு ஆதாரமாகிப் போனது. மலைச்சாமி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடியும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள். மோடி பிரதமரானால் ஜெயலலிதா நெருங்கிய நல்லுறவுடன் இருப்பார் என்று கூறியிருந்தார்.

ஜெ. முரண்பாடான பேட்டி

ஜெ. முரண்பாடான பேட்டி

அதே நேரத்தில் ஜெயலலிதாவோ நேற்று அளித்த பேட்டியில், மே 16-ந் தேதியன்றுதான் கருத்து தெரிவிப்பேன். அதுவரை பொறுத்திருங்கள் என்று எதிர்மறையாக கூறி இருந்தார். இருப்பினும் ஜெயலலிதாவின் கருத்தைவிட மலைச்சாமியின் கருத்துகளுக்கே ஆங்கில தொலைக்காட்சிகள் முன்னுரிமை கொடுத்தன.

அதிமுகவில் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து நீக்கம்

இந்த நிலையில் இன்று திடீரென முன்னாள் எம்.பி. மலைச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொண்டதால் கட்சி உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மலைச்சாமி நீக்கப்படுவதாக ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலைச்சாமி யார்?

மலைச்சாமி யார்?

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் மலைச்சாமி. அதன் பின்னர் அதிமுகவில் இணைந்தார். 1999ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.

English summary
ADMK leader Jayalalithaa expels senior AIADMK leader K. Malaisamy after his comments on possible post poll alliance between AIADMK-NDA. Malaisamy had said Jayalalithaa would tie up with Narendra Modi after election results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X