For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அமைச்சர்கள் மீதான நடவடிக்கை ஏன்? ஜெ. விளக்கம் தர கனிமொழி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

மதுரை: தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் தர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும் மூவரும் ஜெயலலிதாவால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகின.

Jayalalithaa should explain on action against Ministers, demands Kanimozhi

அத்துடன் இந்த 3 அமைச்சர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுவிட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதாவை நேற்று பன்னீர்செல்வம் சந்தித்தார். இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் வந்திருந்தனர்.

இதனிடையே நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அமைச்சர்கள் பல முறை மாற்றப்பட்டனர். ஆனால் அதற்கான விளக்கத்தை இது வரை இந்த அரசு அளித்ததில்லை.

தற்போது அமைச்சர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படும் போதே அம்மாவுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்காது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செய்யும் தவறுகள் தனக்கு தெரியாமல் நடப்பது போல ஜெயலலிதா காட்டிக் கொள்வது ஏற்புடையது இல்லை.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

English summary
DMK MP Kanizmozhi has demanded TN CM Jayalalithaa should explain why she take action against Senior Ministers in her cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X