For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. உடல் நிலை.. முதலில் நீர்ச்சத்து குறைவு.. இப்போது நோய்த்தொற்று என்று கூறும் அப்பல்லோ டாக்டர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வரின் நோய் தொற்று குணமாக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு மற்றும் சிறந்த மருத்துவர்களை வைத்து ஆலோசனை செய்து சிகிச்சை அளித்து வருகிறோம்.அவருக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு முதல்வரின் உடல் சிறப்பாக ஒத்துழைக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு முதல்வர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் தமிழக முதலவர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். கடந்த 11 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோவிற்கு சென்று ஜெயலலிதாவை பார்த்தாக அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

Jayalalithaa treatment apollo hospital press release

தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து காய்ச்சல் பாதிப்பு முழுவதுமாக குணமடைந்துவிட்டது. இந்த நிலையில், லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கேட்டறிந்து, முறையான நோய் ஏதிர்ப்பு மருத்துகள் வழங்குவது , நோய்த்தொற்று சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அவரின் பரிந்துரையின்பேரில், மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு குணமடைந்திருப்பது தெரியவந்தது. ரிச்சர்டின் ஆலோசனைப்படி, மேலும் சில நாள்கள் முதல்வருக்கு ஓய்வு தேவைப்படுவதால், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று அதில் கூறப்படுகிறது.

English summary
Tamil Nadu chief minister J Jayalalithaa is being treated for infection with appropriate antibiotics and other allied clinical measures, based on instructions from doctors including Dr Richard Beale, an international specialist from London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X